ஈராக்கில் பெண் எம்.பி. கடத்தல்

Read Time:1 Minute, 6 Second

Irak.jpgஈராக்கில் பெண் எம்.பி. ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் சன்னி, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கிடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் மசூதியை அவர்கள் தாக்க, அவர்கள் மசூதியை இவர்கள் தாக்க என்று கலவரம் வெடித்துள்ளது.

இந்த நிலைமையில் சன்னி பிரிவைச் சேர்ந்த பெண் எம்.பி. தைசிநஜிமஷாதனி நேற்று காரில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவருடன் வந்த 8 பாதுகாவலர்களும் கடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் எம்.பி. உயிரோடு இருக்கிறாரா?, இல்லையா? என்ற தகவலும் இல்லை. கடத்தப்படட் பெண் எம்.பி.யை தேடும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் பெக்காம் ராஜினாமா
Next post ராஜீவ்காந்தி, பிரபாகரன் ரகசிய ஒப்பந்தம்-பாலசிங்கம் பகீர் தகவல்