செயின் பறிப்பு: பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு போலீஸ் விழிப்புணர்வு பிரசாரம்!!

Read Time:2 Minute, 8 Second

80f6b776-e656-460a-908d-2c98c672e6ab_S_secvpfசெயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளனர். அந்த கூட்டத்தில் மாணவிகளுக்கு எந்த மாதிரியான விழிப்புணர்வு பிரசாரத்தை செய்யலாம் என்பது பற்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் பள்ளி தொடங்கும் போது மாணவிகள் கூடி ‘‘அசம்பிளி’’ பிராத்தனையில் பங்கேற்பார்கள். அப்போது தங்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது போல் கல்லூரிகளிலும் மாணவிகள் கூட்டத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண் இன்ஸ்பெக்டர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பல்வேறு பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் தொடங்கி விட்டனர்.

சென்னையில் துரைப்பாக்கம் சங்கலி பறிப்புக்குப் பின்னர், குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொருக்குப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!
Next post கோவை சரவணம்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவரை கடத்தி அறையில் அடைத்து தாக்குதல்!!