இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் பெக்காம் ராஜினாமா

Read Time:2 Minute, 19 Second

Beckham.Football.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக பெக்காம் ராஜினாமா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் பெக்காம் இன்று விலகினார்.

போர்ச்சுக்கல் அணியின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது. ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் காயம் காரணமாக டேவிட் பெக்காம் போட்டியில் இருந்து வெளியேறினார். அப்போது அரங்கில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அணியின் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இதனையடுத்து போர்ச்சுக்கல் வீரர்களுடன் மோதல்போக்கை கடைபிடித்து முரட்டுத்தனமாக நடந்துகொண்ட இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் வெயின் ரூனி, ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த ஆட்டத்தைக் காண அரங்கில் திரண்டிருந்த இங்கிலாந்து ரசிகர்கள், தங்கள் நாட்டு அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள இயலாமல் கண்ணீர்விட்டு அழுதனர்.

இங்கிலாந்து அணியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை டேவிட் பெக்காம் இன்று ராஜினாமா செய்தார். தோல்வி ஏற்படுத்தியிருந்த பாதிப்பு நீங்குவதற்குள் பெக்காம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாழைச்சேனை கறுவாக்கேணியில் இராணுவத்தினர் மீது குண்டுத்தாக்குதல்.
Next post ஈராக்கில் பெண் எம்.பி. கடத்தல்