காதல் திருமணம் செய்த வாலிபரை கொன்ற கூலிப்படையினர் கைது!!

Read Time:3 Minute, 57 Second

c676bc3b-f677-42eb-b377-c94df70caca6_S_secvpfகபிஸ்தலம் அருகே உமையாள்புரம் நடுத்தெருவில் வசிப்பவர் லெட்சுமணன். விவசாயி. இவரது மகன் அன்பழகன் (36). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் தனது உறவினர் தொழிலதிபர் சுப்பிரமணியன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் உறவினர் சுப்பிரமணியன் அன்பழகன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணியன், அன்பழகனுக்கு திருபுவனத்தில் தனது மனைவி பிரபாவதி பெயரில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். மேலும் தனது மகள் லாவண்யாவை (24) சென்னையில் பல் மருத்துவ படிப்பிற்கு சேர்த்து அவருக்கு பாதுகாவலராகவும் நியமித்தார்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அன்பழகன் லாவண்யாவை ரகசியமாக காதலித்து மலேசியாவில் உள்ள சுப்பிரமணியத்திற்கு தெரியாமலேயே பதிவு திருமணம் செய்து கொண்டாராம். உமையாள்புரத்தில் ஒரு மாட்டு பண்ணையும் வைத்து வந்தார். தன் மகளை திருமணம் செய்தது சுப்பிரமணியத்திற்கு தெரியவர அதிர்ச்சியடைந்த அவர் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவப்பெயரை ஏற்படுத்திய அன்பழகனை பழிவாங்க வேண்டும் என திட்டம் தீட்டினார். லாவண்யா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதையும் பொருட்படுத்தாத சுப்பிரமணியன் தன் மருமகன் அன்பழகனை கொலை செய்ய கூலிப்படை ஆட்களை நியமித்தார்.

கடந்த 25–ந்தேதி மதியம் கபிஸ்தலம் அருகே பின்னைமரத்து பிள்ளையார்கோவில் பகுதி காவேரி சாலையில் வந்த அன்பழகனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின்பேரில், பாபநாசம் டி.எஸ்.பி. செல்வராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, சப்–இன்ஸ்பெக்டர் வள்ளி, திலக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் அருகே கொண்டங்குடி கிராமத்தில் மறைந்து இருந்த உமையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்த நேதாஜி மகன் பிரபாகரன் (25), கும்பகோணம் மேலஉத்தமநல்லூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (36), கும்பகோணம் ஊசிமாதா புதுதெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் கார்த்தி (28), மனஞ்சேரி கலியபெருமாள் மகன் இளையராஜா (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அன்பழகனின் மாமனார் சுப்பிரமணியன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செயின் பறிப்பை தடுக்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கை!!
Next post தேனி அருகே மனைவி–மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயி!!