சேலத்தில் ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் உள்பட4 பெண்களிடம் 37 பவுன் நகை பறிப்பு!!

Read Time:6 Minute, 15 Second

65821273-c33c-4b82-8f6d-2c37f58026f9_S_secvpfசேலம் சூரமங்கலம் குரங்குசாவடி ராமசாமி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா (63). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் இவர் பால் வாங்கி கொண்டு தனது வீட்டின் வாசல் பகுதிக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென விமலா கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பினர்.

விமலா திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் நகைப்பறிப்பு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இது குறித்து விமலா சூரமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விமலாவிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தனர். அப்போது யார் என்று அடையாளம் பார்ப்பதற்குள் கழுத்தில் கிடந்த 15 பவுன் மதிப்புள்ள 3 செயின்களை பறித்து சென்று விட்டனர் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

இதையடுத்து நேற்று இரவு 8 மணி முதல் பொதுமக்கள் கூட்டம் அடங்கும் வரை மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் இன்று அதிகாலையும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பெருமாள் கவுண்டர் காலனியை சேர்ந்தவர் சாந்தகுமார், இவரது மனைவி ஷீபா (38). இவர் இன்று காலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அவரது வீட்டின் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். ஒருவன் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு இருந்தான். மற்றொருவன் விலாசம் கேட்பது போல் நடித்து திடீரென ஷீபாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி மோட்டார் சைக்கிளில் ஏற்றி தப்பினர்.

மர்மநபரிடம் இருந்து செயினை காப்பாற்ற ஷீபா முயன்றார். அப்போது பாதி செயின் ஷீபாவிடமும், மீதியை கொள்ளையர்களும் பறித்து சென்றனர். சத்தம் கேட்டு அவரது கணவர் வெளியே ஓடிவந்தார். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் கமலேசன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மர்ம நபர்கள் இந்தியில் பேசியதாக தெரிவித்தனர். எனவே அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து போலீசார் தேடிவருகிறார்கள்.

சிவதாபுரம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி தனலட்சுமி (40). இவர் இன்று காலை தனது வீட்டின் முன்பு பூ வாங்கி கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தபால் நிலையம் எங்கே இருக்கிறது என்று ஒரு நபர் இந்தியில் கேட்டார். அதற்கு தனலட்சுமி பதில் சொல்லி கொண்டு இருந்த நேரத்தில் அந்த நபர் திடீரென தனலட்சுமி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர்.

இதைப்பார்த்து தனலட்சுமி சத்தம் போட்டார். சில இளைஞர்கள் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டினர். ஆனால் அவர்கள் சென்று விட்டனர். இது குறித்து கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்–இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் தாசநாயக்கன் பட்டி சவுடாம்பிகா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி சுகுமாரி (57). இவர் நேற்று இரவு 7 மணியளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்தார். அப்போது மேல் சட்டை அணியாமல் நடந்து வந்த ஒரு வாலிபர் சுகுமாரி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தான்.

நகையை பறிகொடுத்த சுகுமாரியின் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அந்த வாலிபரை விரட்டினர். ஆனால் அவன் இருட்டில் தப்பினான். இதுப்பற்றி தெரியவந்ததும் ரூரல் டி.எஸ்.பி. சந்திரசேகரன், மல்லூர் போலீசார் விரைந்து வந்து விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 16 வயது பெண் கற்பழிப்பு: டி.ஜி.பி.யிடம் பிருந்தாகரத் மனு!!
Next post திருமங்கலம் மருத்துவமனையில் அரசு ஊழியர் தற்கொலை!!