இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 4 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த இருவர் கைது!!

Read Time:2 Minute, 15 Second

71789147-4149-4614-b129-bfedfb2e8ef5_S_secvpfகொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றங்களுக்கு தலைநகரமாக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி சென்று 4 நாட்களாக ஒரு வீட்டுக்குள் அடைத்துவைத்த நான்கு வாலிபர்கள் அவளை கற்பழித்து, சின்னாபின்னப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள முசாபர்நகர் மாவட்டம், திண்ட்வாலி கிராமத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி கடந்த 26-ம் தேதி அதிகாலை தூங்கி எழுந்து, இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்காட்டுக்கு சென்றாள். அப்போது, அப்பகுதி வழியாக சென்ற நான்கு வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவளை கடத்திச்சென்று அதே கிராமத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

அங்கு அந்த நான்கு காமூகர்களும் மாறி, மாறி அந்த சிறுமியை கற்பழித்து நாசப்படுத்தியதோடு, வெளியே போகும்போது அவளை வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்து சென்றனர். இப்படி நான்கு நாட்களாக அந்த கும்பலிடம் கொடுமை அனுபவித்த சிறுமி, நேற்று அந்த வீட்டில் இருந்து தப்பியோடி வந்து நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறி கதறியழுதாள்.

அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து முகேஷ் மற்றும் பிரதீப் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் இரு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகள் ரெயில் பயணிகளிடம் கட்டாய வசூல் செய்ய கூடாது: போலீசார் கடும் எச்சரிக்கை!!
Next post கள்ளக்காதலியுடன் நெருங்கி பழகிய டிரைவர் மீது தாக்குதல்: வாலிபர் ஆத்திரம்!!