சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்!!

Read Time:1 Minute, 49 Second

b896f4a4-72ca-49bf-8710-ec8ef70f42f1_S_secvpfசின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வரும் ராஜ்கமல் தற்போது ‘மேல்நாட்டு மருமகன்’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை ஸ்கை மூவீஸ் என்ற படநிறுவனம் சார்பில் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்நாடு.எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார். இதில் ராஜ்கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரீயன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பலரும் நடித்து வருகிறார்கள். கிஷோர் குமார் இசையமைக்கும் இப்படத்தை எம்.எஸ்.எஸ். இயக்குகிறார்.

ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம் நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கருவாக உருவாக்கியிருக்கிறார்கள்.

கலாச்சாரம் கலந்த படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் படமாக்கி இருக்கிறார்கள். கலாச்சாரத்தை மதிக்கிறவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

பிப்ரவரி மாதம் இப்படத்தின் இசையையும் விரைவில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜீத் வழியில் அனுஷ்கா!!
Next post மிளகாய் தூளை தூவி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!!