மழலைகளோடு மழலையாய் விளையாடிய ஹன்சிகா!!

Read Time:1 Minute, 30 Second

458b148a-91f4-4f00-ae58-0180b542b5fa_S_secvpfதமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘ஆம்பள’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் ‘வாலு’, ‘உயிரே உயிரே’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘புலி’, ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்கள் ஹன்சிகா நடிப்பில் வெளிவர உள்ளன. பல படங்களில் பிசியாக நடித்தாலும் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டு சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தான் தத்தெடுத்த 25 குழந்தைகளுடன் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை மும்பையில் கொண்டாடியுள்ளார். அக்குழந்தைகளோடு இணைந்து மழலையோடு மழலையாய் விளையாடி குழந்தைகளுக்கு மண் பாண்டங்கள், பொம்மைகள் செய்து பரிசளித்து மகிழ்வித்தார்.

இவர்களுக்காக மும்பையில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு: வாலிபர் கைது!!
Next post பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!