அரூபம் (திரைவிமர்சனம்)!!

Read Time:4 Minute, 33 Second

Arubamநாயகன் தேவா, சரண், தர்ஷிதா ஆகியோர் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தேவா வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். சரண், தர்ஷிதா ஆகியோரின் படிப்பை செலவை தேவா ஏற்று வருகிறான்.

இந்நிலையில் தர்ஷிதா மீது தேவா காதல் வயப்படுகிறான். அந்த காதலை தன் நண்பன் சரண் மூலம் தர்ஷிதாவிடம் சொல்ல, அவளும் தேவாவின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். இருவரும் காதலித்து வருகிறார்கள்.

கல்லூரி படிப்பை முடித்தப்பின் தேவாவின் பெற்றோர்கள் தேவாவிற்கு, அத்தை மகளான சஹானாவை வலுகட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்குபின் இருவரும் கொடைக்கானலில் உள்ள எஸ்டேட் பங்களாவிற்கு செல்கிறார்கள். அங்கு தேவாவின் எஸ்டேட்டை சரண் கவனித்து வருகிறான்.

தேவா, மனைவி சஹானா மீது விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறான். காதலியான தர்ஷிதாவையே நினைத்து வருகிறான். தேவாவின் மனதை மாற்ற சஹானா முயற்சி செய்து வருகிறாள்.

ஒரு நாள் சஹானா தன் பங்களாவிற்கு பின்னால் உள்ள பாலடைந்த பங்களாவிற்கு செல்கிறாள். அங்கு வித்தியாசமான ஒரு உருவம் (ஆவி) மறைந்து செல்கிறது. பயந்து வீட்டிற்கு செல்லும் சஹானாவை அங்கேயும் பயமுறுத்துகிறது.

மறுபக்கம் தேனி தொழில் அதிபர் ஒருவர் கொடைக்கானலுக்கு வந்துவிட்டு காணமால் போயிருக்கிறார் என்று போலீஸ் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் ஒருநாள் சஹானா கர்ப்பம் ஆகிறாள். பெற்றோர்கள் அனைவரும் சந்தோஷமடைகிறார்கள். ஆனால் தேவை இதை ஏற்க மறுக்கிறான். நான் இதுவரை சஹானாவை தொட்டதே இல்லை என்று கூறுகிறான். இதனால் சஹானா அதிர்ந்து போகிறாள்.

உண்மையிலேயே சஹானா கர்ப்பத்திற்கு யார் காரணம்? தேவாவின் காதலி தர்ஷிதா என்ன ஆனாள்? அந்த மர்ம உருவம் எதற்கு சஹானாவை பயமுறுத்துகிறது? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தேவா நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நாயகனுக்கு உண்டான தோற்றம் இவருக்கு பொருந்தாமல் இருக்கிறது. இவருக்கு நண்பராக சரண் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவருக்கும் கதாநாயகனுக்கு உண்டான சமமான கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள்.

நாயகிகளாக நடித்திருக்கும் தர்ஷிதா மற்றும் சஹானா ஆகியோர் கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக தர்ஷிதா கவர்ச்சியில் தாராளம் காண்பித்திருக்கிறார்.

திகில் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்திருக்கிறார். முதல் பாதி குழப்பத்திலேயே திரைக்கதை நகர்கிறது. லாஜிக் இல்லாத காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதை தவிர்த்திருக்கலாம். படம் பார்க்கும்போது நிறைய கேள்விகள் மனதில் எழுகிறது. சொல்ல வருவதை தெளிவாக சொல்லியிருக்கலாம்.

சுனில் சேவியர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயபாலனின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘அரூபம்’ சுவாரஸ்யம் குறைவு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதி!!
Next post கூலிப்படையை ஏவி 2–வது மனைவி கொல்ல முயற்சி?: மகனுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்!!