வாழைச்சேனை கறுவாக்கேணியில் இராணுவத்தினர் மீது குண்டுத்தாக்குதல்.

Read Time:1 Minute, 29 Second

batticalo_+2.jpgவாழைச்சேனை கறுவாக்கேணியில் வீதிபாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது இன்று காலை 10.30 மணியளவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு இராணுவத்தினர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் எம்.அசோக்கசிறிவத்தன வயது 32 இவரின் ஒரு கைதுண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆட்டோ சாரதி ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் இன்று ஞாயிற்று கிழமை பகல் 12.30 மணியளவில் சுடப்பட்டு படுகாயமடைந்துள்ளார். சுடப்பட்டவர் கிருஸ்ணப்பிள்ளை கருணாகரன் வயது 28 இவரை சுட்டுவிட்டு ஆட்டோவையும் ஆயுததாரிகள் அபகரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்தவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்.கோண்டாவில் சந்தியில் குண்டுத் தாக்குதல் சிப்பாய் பலி
Next post இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் பெக்காம் ராஜினாமா