அழகியை காட்டி என்ஜினீயரை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்கள்!!

Read Time:3 Minute, 7 Second

a4a2628b-b9b7-4b61-89d9-3c551237fe76_S_secvpfமதுரை கே.புதூரை சேர்ந்த ஜெயமணி மகன் காமாட்சி பாண்டியன் (வயது 29). கோவையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெரியகுளம் அருகில் உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் பிரசவத்திற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்தார். அவருக்கு தற்போது 2–வது பெண் குழந்தை பிறந்தது.

விடுமுறைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காமாட்சி பாண்டியன் மதுரை வந்தார். ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் வருவதற்காக பஸ் ஏறினார். அப்போது பஸ்சில் கைக்குழுந்தையுடன் வந்த ஒரு பெண் காமாட்சிநாதனிடம் பேச்சு கொடுத்தார்.

இரவு நேரம் என்பதால் இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டே வந்துள்ளனர். அந்த பெண் எனது கணவர் பெரிய குடிகாரர். அவருக்கு ஒரு போன் செய்ய வேண்டும் என்று சொல்லி காமாட்சிபாண்டியனின் செல்போனை வாங்கி ஒரு நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்துள்ளார்.

எதிர்முனையில் பேசியவரிடம் அந்த பெண் தான் தேனிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒருமணி நேரத்தில் வருவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

பின்னர் பெரியகுளம் பஸ் நிலையத்தில் இறங்க முயன்ற காமாட்சிபாண்டியனை மறித்த அந்த பெண் தனக்கு பயமாக உள்ளது. எனவே தேனி வரை என்னுடன் துணைக்கு வரவேண்டும் என்று கூறி உள்ளார். அவரும் சபலத்தில் வருவதாக சம்மதித்தார்.

பஸ் நிலையம் அருகே அதிகாலை 4 மணிக்கு இறங்கிய இருவரும் சிப்காட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். முன்னே சென்ற காமாட்சிபாண்டியன் சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. அப்போது மறைந்திருந்த 2 பேர் அவரை தாக்கி அவரிடம் இருந்த தங்க செயின், மோதிரம், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

காமாட்சிபாண்டியனுக்கு அப்போதுதான் அந்த பெண்ணும் இவர்களது கூட்டாளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பஸ்சில் வந்த பெண் பேசிய நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை: நடிகை அஞ்சலி!!
Next post கூலிப்படையை ஏவி நிதி நிறுவன அதிபரை கொன்ற கள்ளக்காதலி: 7 பேர் கைது!!