கோவை சிங்காநல்லூரில் பங்களாவில் விபசாரம்: மும்பை நடன அழகி மீட்பு!!

Read Time:4 Minute, 22 Second

77c4fa09-34e6-4a83-9da5-86c0dfd5b328_S_secvpfகோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி திரு.வி.க.நகரில் உள்ள பங்களா வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் விபசார கும்பலை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். கமிஷனர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், மகேஸ்வரன், சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவு, பகல் என 24 மணி நேரமும் அந்த பங்களாவுக்கு தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள் வந்து செல்வது தெரியவந்தது.

எனவே போலீசுக்கு வந்த ரகசிய தகவல் உண்மைதான் என்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து விபசார கும்பலை பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டது. பங்களாவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது ஒருவன் பங்களாவுக்குள் இருந்து ஆவேசமாக வெளியே ஓடி வந்தான். அவன் கையில் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது. என்னை யாரும் பிடிக்க வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினான். இருப்பினும் போலீசார் மிகவும் துணிச்சலாக செயல்பட்டு அவனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவன் பெயர் கண்ணன் என்பதும் அவன்தான் விபசார கும்பலின் தலைவன் என்பதும் தெரிய வந்தது.

பின்னர் பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு யாருமே இல்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்த போது ரகசிய அறையில் 25 வயது மதிக்கத்தக்க அழகி இருந்தாள். அவளை போலீசார் மீட்டனர்.

பின்னர் யார்? எந்த ஊர்? என்று விசாரித்த போது தனது பெயர் புல்புல், மும்பையில் நடன அழகியாக உள்ளேன். என்னுடன் மேலும் 2 அழகிகள் உள்ளனர். அவர்களை புரோக்கர்களான ஏசுதாஸ், ராம்குமார் ஆகியோர் வாடிக்கையாயளர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் புரோக்கர்கள் 10 ஆயிரம் வசூலிப்பார்கள்.

அதில் 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே எங்களுக்கு தருவார்கள். ஒரு நாளைக்கு 5 முதல் 10 வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள் என்றாள். தொடர்ந்து அங்குள்ள அறைகளில் சோதனை நடத்தியபோது 7 செல்போன்கள், கத்தி, அரிவாள், ஆணுறைகள் ஆகியவை சிக்கின.

செல்போனில் உள்ள எண்களை தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் பேசியவர்கள் அந்த பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் படிப்பவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் பல தொழில் அதிபர்களின் செல்போன் எண்களும் சிக்கின. மறுமுனையில் பேசுவது போலீசார் என்பதை அறிந்த அவர்கள் அதிர்ந்து போனார்கள். தயவு செய்து எங்கள் பெயரை வெளியிட்டு விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டனர்.

கடந்த மாதம்தான் இந்த கும்பல் இங்கு வந்து விபசார தொழிலை தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. போலீசாரை மிரட்டிய புரோக்கர் கண்ணன் மீது குனியமுத்தூர், சரவணம்பட்டி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன.

சரவணம்பட்டியில் பெண்ணை கொன்று நகை பறித்த வழக்கிலும் கண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பணியில் சேர்ந்தார்: பொதுமக்கள் நல்லவர் என சிபாரிசு!!
Next post 11000 வோல்ட் மின்சாரத்தை தாங்கும் 16 வயது மனித டிரான்ஸ்பார்மர்!!