படித்த பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது: நீலகிரி கலெக்டர் சங்கர் பேச்சு!!

Read Time:7 Minute, 56 Second

df2d9697-0523-489a-a7a1-69e4604a2970_S_secvpfஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் சங்கர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழி காட்டும் அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:–

“பெண் என்பவர் பெருமைக்கு உரியவர், தியாக உணர்வு கொண்டவர். சிறுமியாக இருக்கும்பொழுது தாய் தந்தைக்கு துணையாக இருப்பார். திருமணத்திற்கு பிறகு கணவனுக்காகவும், உறவுக்காகவும் வாழ்கிறார். பிள்ளை பெற்ற பிறகு குழந்தைகளுக்காக வாழ்கிறார். பின்னர் பேரப் பிள்ளைகளுக்காக வாழ்கிறார். கடைசி காலத்தில் கணவருக்காக வாழ்கிறார்.

கடைசி வரை அவள் தனக்காக வாழ்வதில்லை. எனவேதான் பெண் என்பவள் அர்ப்பணிப்போடு வாழ்பவர் என கூறுகிறோம். அந்த அர்ப்பணிப்போடு வாழ்வதாலேயே நதிகளுக்குகூட கங்கா, யமுனா, காவேரி என பெண்ணையே குறிப்பிட்டு சொல்கிறார்கள். மொழிக்கு தாய்மொழி என்றும், நம்மை தாங்கும் பூமிக்கு பூமிதாய் என்றும், நம் நாட்டிற்கு தாய்நாடு என்றும் நாம் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக அழைக்கிறோம்.

பண்டைய காலத்தில் பெண் குழந்தை என்றால் கொன்று விடுவார்கள். அந்த வகையில் தற்போது இந்திய அளவில் தோராயமாக 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்றும், தமிழகத்தை பொறுத்தவரையில் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்றும் கணக்கிட்டுள்ளனர்.

இந்த நிலை நீடித்தால் பண்டைய காலம்போல ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் கல்லை தூக்க வேண்டும், மாட்டை அடக்க வேண்டும் என்கிற நிலை வந்தாலும் வரும். சமூகத்தில் ஆணும் பெண்ணும் சரிக்கு சரி என்ற நிலையில் இருந்தால்தான், உலகில் ஒற்றுமை, அன்பு, பாசம் மேலோங்கி நிற்கும்.

போரில்லா உலகம் வேண்டு மெனில் தலைமை பண்பிற்கு பெண்கள் வர வேண்டும் என்பார் பாரதியார். பெண் கல்வி என்பது பெண்களுக்கு உரிமையை பெற்று தருவது என்பது பொருளாகும்.

முன்பெல்லாம் பெண்கள் 5–ம் வகுப்பு முடிப்பதே முடியாத காரியமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் 10, 12 வகுப்பு தேர்வுகளில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஏனெனில் பெண்கள் கல்வி கற்றால் இந்த சமூகம் முன்னேறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பாரதிதாசன் கூறியது போல ஒரு ஆண் கல்வி கற்றால் அவருக்கு மட்டுமே முன்னேற்றம். ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அவரை சார்ந்த அந்த குடும்பத்திற்கு முன்னேற்றம். எனவே கவிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் எண்ணம் இப்பொழுது நிறைவேறிவிட்டதாகவே தோன்றுகிறது.

ஏனெனில் தற்போது எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். திறமையால் முன்னிலைப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசும் பெண் கல்வியை ஊக்குவிக்க மடிக்கணினி, விலையில்லா புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மிதிவண்டி, கல்வி உதவித்தொகை என கல்விக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறது.

பெண்களுக்கு 10–ம் வகுப்பு படித்தால் 4 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் என்றும் பட்டப்படிப்பு படித்தால் 4 கிராம் தங்கம், 50 ஆயிரம் ரொக்கம் என்றும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

நாம் நினைப்போம் எல்லாவற்றிற்கும் 50 ஆயிரம் கொடுக்கலாமே என்று. ஆனால் பெண்ணை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தால் 50 ஆயிரம் கிடைக்குமே என்ற எண்ணத்திலாவது பெண்ணுக்கு பட்டப்படிப்பு கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

முன்பெல்லாம் 100 பெண்கள் என்றால் அதில் 25 பெண்கள்தான் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருப்பார்கள். ஆனால் 2014–15–ல் 100 பெண்களுக்கு 44 பெண்கள் பட்டதாரிகள் என்றால் நிச்சயமாக வரவேற்க வேண்டும்.

அதேபோலதான் தமிழக அரசு பட்டப்படிப்பு படித்த பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கி விடக்கூடாது. அவர்கள் சுய தொழில் செய்தோ, அரசு வேலை செய்தோ வருமானத்தை பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்காகத்தான் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

எல்லோருக்கும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்றும், ஐ. பி.எஸ் ஆக வேண்டும் என்றும் ஆர்வம் இருக்கும். போட்டி தேர்வு எழுதும்போது குறைந்த பட்சம் 15 முதல் 16 மணி நேரம் படித்தால் மட்டுமே அத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற முடியும். அட்டவணை போட்டு படிக்கலாம். கடினமான பாடங்களை காலை நேரத்தில் படிக்கலாம். ஒரு பகுதியை படிக்கும்போது குறிப்பெழுதி படிக்க வேண்டும்.

கூட்டு முயற்சியோடு படிக்க வேண்டும். சந்தேகங்களை கேட்டு படிக்க வேண்டும். பழைய கேள்வித்தாளை ஆராய வேண்டும். எந்த வினா மறுபடி மறுபடி கேட்கப்படுகிறது என்று ஆராய்ந்தாலே நிச்சயமாக தேர்ச்சி பெற்று விடலாம்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செல்வநாயகி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தெய் வீகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பழங்குடியினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் (பொ) சுப்பிரமணியன் வர வேற்றார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனி நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்யாவால் விஷால் வேதனை!!
Next post சோகத்தில் ஆனந்தமான நடிகை!!