ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!

Read Time:3 Minute, 58 Second

82df44d1-23b6-4542-9732-37eddd458a63_S_secvpfகற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்திலும், அறுசை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாலும் ஜாமின் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அத்துடன், ஜோத்பூர் மருத்துவமனையின் பரிசோதனை முடிவையும் அவர் இணைத்திருந்தார்.

ஆனால், இதை கண்டு கொள்ளாத உச்ச நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள 8 டாக்டர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்த குழு ஆசாராமை பரிசோதித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

கோர்ட் உத்தரவுப்படி, கடந்த முதல் தேதி எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் டி.எஸ். தாக்குர் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் அடங்கிய பெஞ்சு, ‘எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் ஆசாராம் பாபுவுக்கு ஆபரேஷன் ஏதும் தேவையில்லை என்றும் வெளி நோயாளியாகவே அவர் சிகிச்சை பெறலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்தது என்ன?’ என்று ஆசாராம் பாபுவின் வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த ஆசாராம் பாபுவின் வக்கீல் சல்மான் குர்ஷித், ‘எய்ம்ஸ் மருத்துவர் குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்க்க அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர், இந்த மருத்துவ அறிக்கையின் நகல்களை ஆசாராம் பாபுவின் வக்கீலுக்கு வழங்கும்படி கோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து கூறிய நீதிபதிகள், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையை புறந்தள்ளிவிட முடியாது. எனவே, ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது என தீர்ப்பளித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஜோத்பூர் நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டியுள்ள இதர மூன்று சாட்சிகளிடமும் விசாரணையை முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலத்தின் அடியில் ஒரு அழகிய அதிசயம் (வீடியோ இணைப்பு)!!
Next post 2-வது வெற்றியை ருசித்தது சென்னை நடிகர்கள்!!