அரசு மருத்துவமனையின் புறக்கணிப்பால் மரத்தடியில் இறந்த குழந்தையை பிரசவித்த பெண்ணின் துயரம்!!

Read Time:1 Minute, 57 Second

6fa68477-bf7b-4dcc-9fe3-b9b2453022d4_S_secvpfமத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள கெகுகேடா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் கான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி ரூபினா பீயை இன்று பிரசவத்திற்காக போபாலில் உள்ள அரசு சுல்தானியா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

காலை 6 மணிக்கு வந்த ரூபினா பீவியை ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்காமல் 10 மணி வரை அங்கிருந்த ஊழியர்கள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடுமையான இடுப்பு வலி ஏற்பட்டு அலறித்துடித்த அந்தப் பெண், அமர்ந்திருந்த வேப்ப மரத்தடியிலேயே பிரசவிக்க நேர்ந்தது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் தனது குழந்தை இறந்து பிறந்ததாக குற்றம் சாட்டிய அஜ்மீர் கான், இச்சம்பவம் தொடர்பாக தலையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது மனைவியை ஆஸ்பத்திரிக்குள் சேர்ப்பதற்கு 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் நிர்ப்பந்தித்ததாகவும், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள அஜ்மீர் கான், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் தனது வாரிசு பலியாக நேர்ந்திருக்காது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ படத்தை எதிர்த்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!!
Next post வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்!!