5-ந்தேதி பிரான்ஸ்-போர்ச்சுக்கல் அரை இறுதியில் மோதல்; மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி

Read Time:2 Minute, 11 Second

W.Football1.jpg18-வது உலககோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. `லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றன.`லீக்’ ஆட்டங்கள் 23-ந்தேதி முடிந்தது. அதன் முடிவில் ஜெர்மனி, ஈக்வடார், இங்கிலாந்து, சுவீடன், அர்ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, இத்தாலி, கானா, பிரேசில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், உக்ரைன் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

2-வது சுற்று ஆட்டங்கள் 27-ந்தேதி முடிந்தது. இதன் முடிவில் ஜெர்மனி, இங்கிலாந்து, அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரேசில், பிரான்ஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

கால் இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தது. நடப்பு சாம்பியனான பிரேசில், முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, இங்கிலாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.

ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நாளை ஓய்வு நாளாகும். 4-ந்தேதி டார்ட்மென்ட் நகரில் நடைபெறும் முதல் அரை இறுதியில் ஜெர்மனி-இத்தாலி அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதி ஆட்டம் 5-ந்தேதி முனிச் நகரில் நடக்கிறது. இதில் 1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ்- போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது இலங்கை கடற்படை தாக்குதல்
Next post கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலம்