தொப்பூரில் உள்ள லாட்ஜ் அறையில் கள்ளக்காதலியை கொன்று முதியவர் தற்கொலை!!

Read Time:3 Minute, 44 Second

5efa9dbc-3eb7-44b0-82b5-f5b476ba8e2b_S_secvpfசேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரும், இவரது மகன் குமரவேலும் சேலம் 4 ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களது டீக்கடைக்கு பின்புறம் உள்ள வீட்டில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆலமரத்துக்காடு பகுதியில் வசிக்கும் அப்துல்லாவின் மனைவி பப்பியா (45) என்பவர் வீட்டு வேலை செய்தார்.
4 வருடத்துக்கு முன்பு பப்பியாவுக்கும், ராஜகோபாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளத்தொடர்பாக மாறியது.

பப்பியாவுக்கு ராஜகோபால் அடிக்கடி பணம் கொடுத்து வந்தார். இருவரும் வாரந்தோறும் வியாழக்கிழமை மாலையில் தொப்பூர் சென்று அங்கு உள்ள தனியார் லாட்ஜ் அறையில் தங்குவார்கள். மறுநாள் மதியம் அங்கு இருந்து புறப்பட்டு சேலத்துக்கு வருவார்கள்.

நேற்று முன் தினம் அவர்கள் இருவரும் சேர்ந்து தொப்பூர் சென்று லாட்ஜ் அறையில் தங்கினார்கள். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியே லாட்ஜ் ஊழியர் எட்டிப்பார்த்த போது ராஜகோபால் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். பப்பியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனால் லாட்ஜ் ஊழியர் தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து 2 பேரின் பிணங்களை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் கள்ளக்காதலியை கொன்று விட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

ராஜகோபாலுடன் தொடர்பு வைத்து அவரிடம் பலமுறை பணம் வாங்கி வந்த பப்பியாவுக்கு சமீப காலமாக வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி ராஜகோபால் கேட்கவே இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் கள்ளக்காதலியை நைசாக பேசி தொப்பூர் அழைத்து வந்து லாட்ஜில் தங்க வைத்து உள்ளார். அங்கு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் தலையணையால் கள்ளக்காதலி முகத்தில் வைத்து அழுத்தினார். பின்னர் கல்லால் தலையில் தாக்கி உள்ளார்.

இதில் பப்பியா ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். பின்னர் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தொப்பூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது. இது குறித்து இரண்டு பேரின் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 77 வயது மணிப்பூர் மந்திரி 24 வயது பெண்ணை மணந்தார்: முதல்–மந்திரி நேரில் வாழ்த்தினார்!!
Next post டாக்டர் இறந்ததாக கூறிய மாணவர் உடல் அசைந்ததாக பரபரப்பு: உறவினர்கள் முற்றுகை!!