77 வயது மணிப்பூர் மந்திரி 24 வயது பெண்ணை மணந்தார்: முதல்–மந்திரி நேரில் வாழ்த்தினார்!!

Read Time:1 Minute, 52 Second

16ba2488-9164-4151-81a6-d1316a5a9f14_S_secvpfமணிப்பூர் மாநிலத்தில் முதல்–மந்திரி ஓக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் புங்ஜதாங். 77 வயதாகும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு மந்திரியின் மனைவி நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். குழந்தைகளுக்கு திருமணமாகி தனித்தனியாக சென்று விட்டனர். 3 வருடமாக புங்ஜதாங் தனியாக வசித்து வந்தார். மந்திரியாக இருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கையை கவனிக்க பெண் துணை தேவைப்பட்டது.

இதையடுத்து தனது சொந்த ஊரான சுரசந்பூரை சேர்ந்த நர்சிங் படித்து முடித்த 24 வயது இளம்பெண் தங்னகை சங்கை திருமணம் செய்ய இருதரப்பினரும் பேசி முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் சொந்த ஊரில் மந்திரி–நர்சு திருமணம் நடந்தது. திருமண விழாவில் முதல்–மந்திரி ஓக்ராம் மற்றும் அனைத்து மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மந்திரி புங்ஜதாங் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஆவார். பழங்குடியினத்தை சேர்ந்தவர் நீண்ட காலமாக மணிப்பூரில் மந்திரியாக இருந்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 வயது மகளை உயிரோடு புதைக்க முயன்ற கொடூர தந்தை!!
Next post தொப்பூரில் உள்ள லாட்ஜ் அறையில் கள்ளக்காதலியை கொன்று முதியவர் தற்கொலை!!