விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி!!
‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. இவருடைய முதல் படமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது படமும் ஓரளவுக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளதால், தனக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையில் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ‘கப்பல்’ படத்தின் வெற்றியில் மிதந்து கொண்டிருக்கும் சோனம் பாஜ்வா கூறும்போது, நான் பஞ்சாப்பை சேர்ந்தவள். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான்.
நாடே போற்றும் இயக்குனரான ஷங்கரின் தயாரிப்பில் என்னுடைய முதல் படம் வந்தது எனக்கு மிக மிக பெருமை. ‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை உலகின் தூண்களான விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர்களது கனிவான வார்த்தைகளும், ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது.
இதற்கு பிறகு நான் விஜய்க்கு தீவிர ரசிகை ஆகி விட்டேன். எளிமையாக அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக இருந்தார். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது இந்த வருடமே கை கூடும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
கப்பல் படத்துக்கு பிறகு எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதன் சம்மந்தமாக விரைவில் முறையான அறிவிப்பு வரும். நான் சமீபமாக நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். திரை உலகின் நுணுக்கங்களை அந்த படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன் என்று கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating