திருவண்ணாமலையில் போலி டாக்டர் கைது!!

Read Time:1 Minute, 12 Second

694caa16-afcd-4e01-adf3-ca86d020ba57_S_secvpfதிருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் போலி டாக்டர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் திருவண்ணாமலையை சேர்ந்த அருண் (வயது 34) என்பதும், பிளஸ்–2 வரை மட்டுமே படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி!!
Next post ஈரோட்டில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை!!