தூத்துக்குடியில் வீடு புகுந்து திருட முயன்ற பிளஸ்–2 மாணவன் கைது!!

Read Time:1 Minute, 44 Second

48feedbf-6063-4608-8b5b-526b6a176c2f_S_secvpfதூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அய்யம் பெருமாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நைசாக வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றார்.

திருடனை கண்ட அய்யம் பெருமாள் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தப்ப முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெயராஜ் (வயது20) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்தனர். கைதான ஜெயராஜ் பிளஸ்–2 படித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக கிருஷ்ண ராஜபுரம் பகுதிகளில் வீடு புகுந்து திருடுவது, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம்?
Next post கிழக்கே உதித்த காதல் (திரைவிமர்சனம்)!!