வாணியம்பாடி அருகே சுற்றுலா வந்த தெலுங்கானா மாணவி சாவு!!

Read Time:1 Minute, 16 Second

69fed0cc-cd55-480d-810a-02426f2486ea_S_secvpfதெலுங்கானா மாநிலம் இலங்காமண்டல் பகுதியை சேர்ந்த கங்காதரன் மகள் நிகிதா (15). அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்

பள்ளியில் இருந்து 50 மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை சுற்றுலா பஸ் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வந்தது. அப்போது மாணவி நிகிதாவுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நிகிதா பரிதாபமாக இறந்தார்.

இதனால் சுற்றுலா வந்த மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த மாணவி திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சை அருகே எலக்ட்ரீசியன் குத்திக் கொலை!!
Next post ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!!