கோவையில் கணவனை கொல்ல முயன்ற மனைவி போலீசில் சிக்கினார்!!
கோவை பீளமேடு அண்ணா நகர் விகாஷ் லே–அவுட் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் (வயது 30). இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு தங்கராஜ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவிக்கு சாப்பாடு வாங்குவதற்காக சென்றுக்கொண்டிருந்தார். நியூ ஸ்கீம் ரோட்டில் சென்றுக்கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்தனர்.
முகவரி கேட்பது போல் நடித்த அவர்கள் தங்கராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். உருட்டுக்கட்டையாலும் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் தங்கராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இடது கையில் விரல் ஒன்று துண்டானது. ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தங்கராஜ் தாக்கப்பட்டது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கமிஷனர் பர்வேஸ்குமார், உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.
தனிப்படை போலீசார் தங்கராஜிடம் விசாரித்தனர். அவர் தனக்கு எதிரிகள் யாரும் இல்லை. நான் யாருக்கும் துரோகம் செய்தது இல்லை என்றார். எனவே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
முதல் கட்டமாக தங்கராஜின் மனைவி ரம்யாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான பதில்களே விடையாக கிடைத்தது.
ரம்யா மீது சந்தேகம் வலுக்கவே போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது ரம்யா அளித்த பதில் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
‘‘எனக்கும், தங்கராஜூக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை. பெற்றோர் வலுக்கட்டாயமாக என்னை தங்கராஜூக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்த சமீர் என்பவரை உயிருக்கு உயிராய் காதலித்தேன். அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தேன்.
ஆனால் எனது ஆசைக்கனவுகள் நிறைவேறவில்லை. வேண்டா விருந்தாளியாக தங்கராஜ் என் வாழ்க்கையில் நுழைந்து விட்டார்.
திருமணத்துக்கு பின்னரும் என்னால் சமீரை மறக்க முடியவில்லை. எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சமீருக்கு தகவல் தெரிவிப்பேன்.
அவரும் உடனே வீட்டுக்கு வந்து விடுவார். அதன் பின்னர் உல்லாசமாக இருப்போம். சமீரை தவிர யாரையும் என் மனது ஏற்கவில்லை.
எனவே எனது கள்ளக்காதலான சமீரிடம் ஒரு திட்டத்தை கூறினேன். அதாவது தங்கராஜை தீர்த்துக்கட்டி விட்டு சமீருடன் உல்லாசமாக வாழ வேண்டும் என்பது தான் அந்த திட்டம்.
அந்த திட்டத்துக்கு சமீரும் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து எங்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தோம்.
சமீர் நான் மட்டும் தங்கராஜை தீர்த்துக்கட்ட முடி யாது. கூலிப்படையை சேர்ந்த யாரையாவது துணைக்கு அழைத்துக்கொள்கிறேன். அதற்கு பணம் தேவை என்றார்.
அவர் கேட்டுக்கொண்ட படி வீடு கட்ட கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தேன். அதன்படி சமீர் கூலிப்படையை சேர்ந்த ரமேஷ் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு தயாரானார்.
எங்களது திட்டப்படி தங்கராஜை சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு எனக்கு சாப்பாடு வாங்கி வர அனுப்பினேன். அப்போது அவரை சமீரும், ரமேசும் தாக்கியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டனர். போலீசாரின் அதிரடி விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம்.
மேற்கண்டவாறு ரம்யா தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
Average Rating