மனைவி கோபித்து சென்றதால் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கணவன்!!

Read Time:2 Minute, 14 Second

1ec472f5-d4c4-4205-97d6-b00505eb07d6_S_secvpfமனைவி கோபித்து சென்ற விரக்தியில் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற வாலிபர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர்களது மகள்கள் தீபாஸ்ரீ (9), ரித்திஸ்ரீ (7) அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

4 வருடங்களுக்கு முன் ராஜலெட்சுமி இறந்துவிட்டார். இதையடுத்து சிவக்குமார் வேறு ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் நிம்மதியாக சென்ற அவரது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக அவர்களிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

சம்பவத்தன்று நடந்த சண்டையில் சிவக்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த சிவக்குமார் தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்தார். வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தீபாஸ்ரீ நேற்று இறந்தாள். இன்று காலை ரித்திஸ்ரீ இறந்தாள். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவக்குமார் இன்று காலை 10 மணி அளவில் இறந்தார்.

சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை தந்தையே விஷம் கொடுத்து கொன்று தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 நாளில் கசந்த திருமண வாழ்க்கை: தாலியை கழற்றி கொடுத்துவிட்டு சென்ற பேராசிரியை!!
Next post உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் குடிபோதையில் தகராறு: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!