கின்னஸ் சாதனைக்காக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி!!

Read Time:2 Minute, 1 Second

aa20303f-757a-4c4f-b99a-740e6659f672_S_secvpfபிரபல புல்லாங்குழல் கலைஞர் ’பண்டிட் ரோனு மஜும்தார்’ தலைமையில் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் முயற்சியாக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி டெல்லியின் நாசிக் பகுதியில் நாளை நடைபெறுகிறது.

‘வேணு நாத்’ என்ற பெயரில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியை வாழும் கலை அறக்கட்டளை ஒருங்கிணைக்கிறது.
ஒரே மேடையில் ஆயிரக்கணக்கானோர் கூடி புல்லாங்குழல் இசைக்கும் இந்த நிகழ்ச்சி 80,000 சதுர அடி கொண்ட திடல் ஒன்றில் நடைபெறுகிறது. இந்த இசைக் கச்சேரியின் மூலம் நம்முடைய கிளாசிக்கல் இசை, மதீப்பீடுகள், மற்றும் ஆன்மீகம் புதுப்பிக்கப்படும் என்று வாழும் கலை அறக்கட்டளையை சேர்ந்த சந்தோஷ் கப்னே தெரிவித்தார்.

1996 இல் கிராமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சியை விட, இந்த நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும், தன் வாழ்வின் மிகப் பெரிய சாதனை இது என்றும் விழாவை நடத்தும் பண்டிட் ரோனு மஜும்தார் தெரிவித்தார்.

4000 பேர் பங்கேற்கும் இந்த இசை நிகழ்ச்சியில் 800 பேர் தொழில்முறை இசைக்கலைஞர்கள். மீதமுள்ளவர்கள் ஆரம்ப காலப் பயிற்சியாளர்கள். அவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கே 2 மாதங்களுக்கும் மேல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் குடிபோதையில் தகராறு: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!
Next post போலீஸ் ஸ்டோரிக்காக ஜாக்கிசான் பாடிய பாட்டு!!