பெங்களூரில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை படம் பிடித்த பெயிண்டர் கைது!!

Read Time:2 Minute, 25 Second

3ed9a5d8-c019-482a-99a1-ea90f236862f_S_secvpfபெங்களூரில் கட்டிடத்திற்கு பெயிண்டிங் அடிக்க வந்த இடத்தில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை தன் செல்போனில் படம் பிடித்த பெயிண்டரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெங்களூர் பி.டி.எம். 1-வது ஸ்டேஜில் பி.ஜி. எனப்படும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு தனியார் லாட்ஜ் ஒன்று உள்ளது. இந்த லாட்ஜில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த லாட்ஜில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐ.டி.பெண் ஒருவர் தங்கி வருகிறார். சம்பவத்தன்று காலை 8 மணி அளவில் குளிப்பதற்காக அந்த பெண் குளியலறைக்கு சென்றுள்ளார்.

அப்போது குளித்து கொண்டிருக்கும் போது ஏதோச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்துள்ளார். பக்கத்து பில்டிங்கில் இருந்து வாலிபர் ஒருவர் அந்த பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதனைதொடர்ந்து வேகமாக ஆடைகளை உடுத்தி பாத்ரூமில் இருந்து வேகமாக ஓடி வந்து லாட்ஜ் உரிமையாளரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் உரிமையாளர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

புகாரை பெற்றுகொண்ட போலீசார் சம்பந்தபட்ட வாலிபரிடம் விசாரணை செய்தனர். விசாரித்ததில் பக்கத்து பில்டிங்கிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்துள்ளதாகவும், அந்த பெண் குளிக்கும் போது படம் பிடிப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் மீண்டும் இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்!!
Next post ம.பி.யில் உயர் வகுப்பு பெண்ணை காதலித்த தலித் வாலிபர், காதலுக்கு துணை நின்ற நண்பர்கள் எரித்துக் கொலை!!