பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 19 Second

nurse_cameron_002எபோலாவால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய செவிலிய பெண்ணுக்காக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரார்த்தனை செய்கிறார்.
பிரித்தானியாவின் மருத்துவமனை ஒன்றில் பாலின் கேபர்கே(Pauline Cafferkey Age-39) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆப்ரிக்க நாடான சியர்ரா லியோனியில் எபோலா நோய் தாக்கத் தொடங்கியதும், இவர் அங்கு குழந்தைகளை காப்போம் என்ற மருத்துவ முகாமில் பணியாற்ற விருப்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்த அவர் எபோலா நோயாளியின் ரத்தத்தை பரிசோதிக்க எடுத்தபோது, அந்த ரத்த மாதிரி அவர் மீது சிதறியுள்ளது.

இதனால் கடந்த மாதம் அவரை எபோலா நோய் தாக்கியுள்ளது. இதனையடுத்து பிரித்தானியாவுக்கு பாதுகாப்பாக வரவழைக்கப்பட்ட இவருக்கு, ராயல் ப்ரீ(Royal Free) மருத்துவமனையில் வைத்து தனியறை ஒன்றில் மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த 2 நாட்களாக அவரது உடல் எடை மிகவும் குறைவதுடன், இதயத்துடிப்பும் சரியாக இல்லை என கூறப்படுகிறது.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டாலும் அவர் பலவீனமாக காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தற்போது கவலைக்கிடமாக உள்ள அவர் விரைவில் குணமடைந்து, அவரது குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10-ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!!
Next post போபாலில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை வாளேந்தி விரட்டிய கல்லூரி மாணவி!!