காஜல் பேரைச் சொல்லி மோசடியா?

Read Time:2 Minute, 4 Second

Untitled-15மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அதிகளவில் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதுமட்டுமின்றி இவர் வணிக வளாகங்கள் திறப்பு மற்றும் நகைக் கடை, ஜவுளிக்கடை திறப்பு விழாக்களிலும் பெரும் தொகை வாங்கிக்கொண்டு கலந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐதராபாத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய வணிக வளாகத்தை காஜல் அகர்வால் திறந்து வைக்க இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்தார். அந்த வணிக வளாகத்தினர் திறப்பு விழாவிற்கு வருமாறு என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை என்றும், என்னுடைய அனுமதி பெறாமலேயே என் பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறியதோடு, உடனடியாக அந்த விளம்பரத்தை அகற்றாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கபடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வணிக வளாக நிர்வாகம் இதற்கு விளக்கமளித்தபோது, தங்களிடம் ஒரு விளம்பர நிறுவனம் காஜல் அகர்வாலை திறப்பு விழாவிற்கு அழைத்து வருவதாக வாக்கு கொடுத்து முன்தொகை பெற்றுள்ளதால்தான் தாங்கள் விளம்பரம் கொடுத்ததாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த தங்கள் நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எண்ணூரில் வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 4 பேர் கைது!!
Next post விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 7 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)!!