புத்தாண்டு இரவில் பெண்களுடன் வந்து வரம்பு மீறும் வாலிபர்கள் மீது வழக்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு!!

Read Time:3 Minute, 53 Second

2db4cf39-a275-4c30-987e-e9f7239ad2fb_S_secvpfசில தினங்களுக்கு முன்பு நீலாங்கரை கடற்கரையில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த பெண், மற்றொரு வாலிபரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

அந்த பெண்ணை போலீஸ் என்று கூறி மிரட்டி அழைத்து சென்ற வாலிபர் அருண் மொழி (30) என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை பகுதி போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இளம் பெண்களை அழைத்து வந்து வரம்பு மீறி நடந்து கொண்ட 3 வாலிபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இளம்பெண்களுடன் ஜோடியாக கடற்கரைக்கு வரும் வாலிபர்கள் தனியாக உட்கார்ந்து வரம்பு மீறி நடந்து கொள்வதால் தான் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே காதல் ஜோடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இன்று புத்தாண்டு இரவையொட்டி, ஏராளமான காதல் ஜோடிகள் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு வருவார்கள்.

எனவே, 23 கிலோ மீட்டர் நீளம் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை இன்று இரவு திருவான்மியூர், கானாத்தூர், நீலாங்கரை போலீசார் கண்காணிக்கிறார்கள்.

அடையாறு போலீஸ் துணை கமிஷனர் கண்ணன், நீலாங்கரை உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், அசோக், சவுந்தரராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இரவு முழுவதும் ரோந்து சுற்றி வருவார்கள்.

புத்தாண்டு தின இரவில் ஜோடியாக வரும் இளம் பெண்களும் வாலிபர்களும் தனியாக உட்கார்ந்து வரம்பு மீறி நடந்து கொண்டால், சம்பந்தப்பட்ட வாலிபர் மீது வழக்கு தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இளம் பெண்கள் எச்சரித்து அனுப்பப்படுவார்கள். தனியாக வரும் பெண்களின் விலாசம், போன் நம்பர் ஆகியவற்றையும் போலீசார் விசாரித்து பதிவு செய்வார்கள்.

நள்ளிரவு குடிபோதையில் யாராவது மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை ஓட்டிச்சென்றால் அந்த வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும். போதையில் இருப்பவர் வேறு வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார். மறுநாள் போலீசாரிடம் எழுதிக்கொடுத்து விட்டு வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இரவு கடலில் குளிக்க போலீசார் தடைவிதித்துள்ளனர். மீறி குளிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரவு விபத்தில் சிக்கியவர்களை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 3 ஆம்புலன்சுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது போல் மெரினா கடற்கரையிலும் தீவிர போலீஸ் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான 3 மாதத்தில் கசந்த காதல்: கைதான என்ஜினீயர் வாக்குமூலம்!!
Next post திருட்டு வழக்கில் கைதான வாலிபர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டாரா?: உயர் அதிகாரிகள் விசாரணை!!