ஹன்ஸிகாவின் கிளாமரும் எகிறிய சம்பளமும்!!

Read Time:2 Minute, 22 Second

Untitled-1111விஷால், ஹன்ஸிகா மோத்வானி ஜோடிபோட்டிருக்கும் ஆம்பள திரைப்படம் பொங்கலுக்கு வௌியாவது உறுதியாகிவிட்டதால், மிச்சமிருக்கும் பாடல் காட்சிகளை வெகு வேகமாக படமாக்கிவருகிறாராம் சுந்தர்.சி.

பொங்கல் ரிலீஸுக்காக இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதை விட பாடல் காட்சிகளைக் கண்டபின் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் என்கின்றனர் படக்குழுவினர்.

ஏனென்றால் இரசிகர்களை கிரங்கடிக்கிற அளவிற்கு ஹன்ஸிகாவின் கிளாமர் தூக்கலாக அமைந்திருக்கிறதாம்.

கோடம்பாக்கத்தில் உலவும் தகவல் காதில் படாமல் இருந்திருந்தால் கதைக்கு தேவைப்பட்டதால் கிளாமராக நடித்திருப்பார்கள் என்று கடந்துபோய்விடலாம்.

பல வருடங்களுக்கு முன்பு, அதாவது சிம்பு நயன்தாராவைக் காதலித்துக் கொண்டிருந்தபோதே சிம்புவுக்கும், விஷாலுக்கும் ஆகாது என்பதால் தான் தற்போது சிம்புவைப் பிரிந்த ஹன்ஸிகா விஷாலுடன் நடித்திருக்கிறார் என்றும், நயன்தாரா விஷயத்தில் விஷாலுக்கும் கொஞ்சம் கடுப்பு மீதமிருந்ததால் தான் வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டார் என்றும் கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

ஆதாரம் இல்லாத தகவல்கள் பலவிதத்தில் வந்தாலும் மீகாமன் படத்தில் ரொம்ப கிளாமராக படமெடுத்துவிட்டார்கள் என்று பஞ்சாயத்து கூட்டிய ஹன்ஸிகா, ஆம்பள படத்தில் ரொம்ப கிளாமராக நடித்திருப்பதும், சொந்தப் படம் என்பதால் பட்ஜெட் ஹீரோயின் தான் என்று சொன்ன விஷால் ஹன்ஸிகாவின் சம்பளத்தை 2 கோடியாக ஏற்றிக் கொடுத்திருப்பதும் கவனிக்கவைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரிக்காக பிரச்சாரம் செய்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழு மீது தாக்குதல்!!
Next post நித்திரவிளை அருகே கற்பழிப்பு வழக்கில் சாட்சி சொன்ன பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!!