த்ரிஷாவை சங்கடப்படுத்திய பிரபுவின் அந்தக் கேள்வி!!

Read Time:2 Minute, 20 Second

Samantha-Hot-Saree-Photo-Gallery-261பாஸ்ட்புட் பரபரக்கும் காலமாக இருந்தாலும் பிரபு, சத்யராஜ் போன்ற சில குறிப்பிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் இருந்தால் அவர்களுக்கென வீட்டில் தயார் செய்யப்படும் வகைவகையான உணவு படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிடும்.

அன்றைக்கு யூனிட்டில் உள்ள ஸ்டார்கள் எல்லோருக்கும் அங்குதான் விருந்து நடக்கும். சமீபத்தில் ‘அப்பாடக்கர்’ படப்பிடிப்பு நடந்தது. ஜெயம் ரவி, பிரபு, திரிஷா பங்கேற்ற காட்சிகளை இயக்குனர் சுராஜ் படமாக்கினார்.
பிரபு வீட்டிலிருந்து மதிய உணவு அடுக்கு கேரியரில் வந்தது. சிக்கன், மட்டன், நண்டு, எறா என வகைவகையான டிஷ்கள் கமகமத்தன. மதிய உணவு இடைவேளை நேரம் வந்ததும் பிரபு வீட்டு விருந்துதான் அங்கு நடந்தது. வாழை இலை விரித்து அதில் வகைவகையான வெஜ், நான் வெஜ் ஐயிட்டங்கள் வரிசையாக பரிமாறப்பட்டன. எல்லோருமே மதிய உணவை ஒரு பிடி பிடித்தனர்.

உடனே திரிஷா தனது இணையதள டுவிட்டர் பக்கத்தை திறந்து விருந்து சாப்பிட்டதை ஊருக்கே அறிவித்துவிட்டார். ‘சிவாஜி வீட்டிலிருந்து மதிய உணவு… இல்லை.. இல்லை.. விருந்து. ஸ்ஸ்ஸ்… என்ன சுவை. இப்போது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது. தேங்க்ஸ் பிரபு சார்’என மெசேஜ் போட்டுவிட்டார்.

இதைப்பார்த்த பிரபு, ‘பதிலுக்கு நீ கல்யாண விருந்து எப்போ போடுவ. சீக்கிரமே போடுமா’ என்று திரிஷாவை பார்த்து தமாஷ் செய்தாராம். பட யூனிட்டார் முன்பு பிரபு இப்படி சொன்னதால் திரிஷாவுக்கு தர்மசங்கடமாகிவிட்டதாம். அதை வெளிக்காட்டாமல் புன்னகைத்தபடி சென்றுவிட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் போதை விருந்து கொண்டாட்டம்: பண்ணை வீட்டில் 40 சிறுவர்கள்-4 இளம்பெண்கள் கைது!!
Next post உ.பி.யில் இரண்டாவது திருமணம் செய்தவர் சுட்டுக்கொலை!!