சுவிஸ் வதிவிட உரிமைபெற்ற தமிழர் புலிகளால் மட்டக்களப்பில் படுகொலை!மரணசடங்கு புகைப்படங்கள்!!

Read Time:3 Minute, 34 Second

Puvani-3.jpgமட்டுநகர் கொம்மாதுறையில் பிறந்து பெரியகல்லாறு 2ம்குறுக்கில் வசித்தவரும் சுமார் 15வருடங்களுக்கு முன்னர் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரி வதிவிடஉரிமை பெற்று வாழ்ந்தவருமான சுரேஸ் அல்லது புவனி அல்லது ஐhன் எனும் வடிவேல் புவனேந்திரன் (37வயது) 25.06.2006அன்று மட்டக்களப்பில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சுவிசர்லாந்தில் சுக் என்ற மாவட்டத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தார் எனவும் தனது விடுமுறைக்காக மனைவி பிள்ளைகளைப் பார்வையிட இலங்கை சென்றபோது மட்டக்களப்பில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

ஏனெனில் இவரது தமையனார் புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து பின்னர் ஈஎன்டிஎல்எப் அமைப்பில் தன்னை இணைத்துச் செயல்படும் ‘பிஎல்ஓ மாமா” எனும் வடிவேல் மகேந்திரன் எனவும், மேற்படி ‘பிஎல்ஓ மாமா” தற்போது கருணாஅம்மானின் அமைப்புடன் இணைந்து செயல்படுவதினாலுமேயே மேற்படி படுகொலை புலிகளால் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. தமையனார் கருணாஅம்மானுடன் இணைந்து செயல்படுவதற்காக அப்பாவியான வடிவேல் புவனேந்திரன் எனும் குடும்பஸ்தர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது எந்தவகையில் நியாயம்??

இதேவேளை சுவிசர்லாந்தில் சூரிச் புலிகளின் தலமையகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தகவல் மற்றும் புலிப்பினாமிகளான சூரிச் புலிகளின் தலமையகத்தின் கீழ் புலிகளோடு சேர்ந்து இயங்கும் மட்டு-படுவான்துறை முனைக்காட்டைச் சேர்ந்த வேதா என்று அழைக்கப்படும்; தாந்தியன் வேதநாயகம், லுசேன் புலிகளின் தலமையகத்தின் கீழ் புலிகளோடு சேர்ந்து மறைமுகமாக இயங்குபவரும் படுகொலை செய்யப்பட்டவரின் தங்கையின் கணவருமான மட்டு-ஏறாவூரைச் சேர்ந்த சண்முகம் தவராஐh, பேர்ன் புலிகளின் தலமையகத்தின் கீழ் புலிகளோடு சேர்ந்து இயங்கும் யாழ்-பருத்தித்துறையை சேர்ந்தவரும் மட்டு- புதூர் என்ற இடத்தில் திருமணம் செய்தவருமான ராமசாமி இரா.துரைரெட்ணம், Nஐர்மனியில் வதியும் மட்டுநகரைச் சோந்த நகைவியாபாரியான கோபி போன்றவர்கள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இக்கொலையின் பின்னால் இருந்து செயல்பட்டுள்ளதும் இவர்கள் மீது சர்வதேச பொலிசாரின் உதவியுடன் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் புவனேந்திரனின் உறவினர் அறியத்தருகின்றனர்.
Thanks…WWW.ATHIRDY.COM
Puvani-3.jpg
Puvani-1.jpg
Puvani-2.jpg
Puvani-4.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளின் அரசியல் பொறுப்பாளருக்கும் கடற்புலிப் பொறுப்பாளருக்குமிடையில் முறுகல்!!
Next post புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடத்தபடவிருந்த 73,000 பென்டோர்ச பற்றரிகள் மீட்பு