அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்படுவாரா..?

Read Time:2 Minute, 53 Second

1729912358imagesமுன்னாள் புத்தசாசன பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கோமரங்கடவல பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சந்துன் ஹேமந்த கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன கோமரங்கடவல பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அங்கு பலர் கூடியிருந்ததை கண்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் காரணம் கேட்டபோது நெல்விதை மானியம் பெற வந்ததாக கூறியுள்ளனர். அதன்போது ஜனாதிபதி திருடன், மானியத்தை வாங்கிக் கொண்டு மைத்திரிக்கு வாக்களிக்கவும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கூட்டத்தில் இருந்த பிரதேச சபை உறுப்பினர் சந்துன் ஹேமந்த, அதனை சொல்பவரும் திருடன்தான் என்று கூறியுள்ளார். அதன்போது கோபமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பின் பிரதேச சபை உறுப்பினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அத தெரணவிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, வாக்களிப்பு நடவடிக்கையை பார்வையிடச் சென்ற தன்மீது தாக்குதல் நடத்த சந்துன் ஹேமந்த முயற்சித்த போது எமது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்த பின் கூடியிருந்த மக்கள் அவரை இழுத்துச் சென்றனர். தாக்கினார்களா என்று தெரியவில்லை. இது குறித்து நான் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால் மேலிடத்து உத்தரவோ தெரியவில்லை என்னை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நான் என்ன கொலைகாரனா கண்ட இடத்தில் கைது செய்ய… என்று அவர் கேள்வி எழுப்பியபடி பதில் அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!!
Next post ஜேவிபி முக்கியஸ்தர் மீது தெனியாயவில் தாக்குதல்!!