நீலகிரியில் குவியும் தேனிலவு தம்பதிகள்!!

Read Time:2 Minute, 8 Second

a4933299-f804-4478-8aa6-48504592b041_S_secvpfநீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது.

இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் பருவமழை முடிவுற்ற பின்னரும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி பனி மூட்டம் நிலவி வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் கடுங்குளிரால் சுற்றுலா தலங்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயற்கை காட்சிகள் அதிகளவில் உள்ளன.

இதனை கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பனிக்காலம் தொடங்கி இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தேனிலவு தம்பதிகள் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியதால் இயற்கை காட்சிகளை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், தற்போது கடுங்குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனர்.

மேலும் ஒரு சில சுற்றுலா பயணிகள் கடுங்குளிர் தாங்காமல் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்திரப்பிரதேசத்தில் பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது- கிளீனர் தலைமறைவு!!
Next post கணவனுக்கு பயந்து கள்ளக்காதலனுடன் தூக்கில் தொங்கிய பெண்: 3 குழந்தைகள் தவிப்பு!!