மட்டு. உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்யும் மழையால் சிரமம்!!

Read Time:2 Minute, 18 Second

467423145Untitled-1மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் கடும் மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் 147.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இங்கு பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீதிகள் பல நீரில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள், பொது கட்டிடங்கள் தபால் நிலையங்கள், போக்குவரத்துச் சபை டிப்போ என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

புதிய காத்தான்குடி, பிர்தொஸ் நகர், ஏத்துக்கால், செல்வாநகர், தர்மபுரம், ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா, செங்கலடி, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி உட்பட மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் மன்னம்பிட்டிய மற்றும் கல்லெல்ல ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை பதுளை – மஹியங்கனை வீதியில் நேற்று நள்ளிரவு மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தலைவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – லோரண்ஸ்!!
Next post ஐ.தே.க.வைப் பிரிந்து ஜனாதிபதியின் பக்கம் சாயுமா இ.தொ.ஐ.மு?