லிங்கா படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!!

Read Time:1 Minute, 35 Second

3c6ca95b-21b3-483f-850a-b47ff2206f3f_S_secvpfரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் ‘லிங்கா’. இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரத்தினவேல் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

இப்படம் உலக முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ‘லிங்கா’ படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ. 60 கோடி வசூலித்து உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும் அனைவராலும் சொல்லப்பட்ட விஷயம் படத்தின் நீளம்தான். ஆதலால் படத்தின் நீளத்தை குறைக்க படக்குழுவினர் தீர்மானித்தனர். எனவே, முன்பாதியில் 6 நிமிடங்களும், பின்பாதியில் 4 நிமிடங்களும் என மொத்தம் 10 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில்வே தேர்வு எழுத அனுமதிக்காததால் பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!!
Next post அனுமதி இல்லாமல் சீனாவில் இருந்து மருந்து பொருட்கள் இறக்குமதி: 12 பேர் கைது!!