ரெயில்வே தேர்வு எழுத அனுமதிக்காததால் பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!!

Read Time:1 Minute, 45 Second

2477e0d2-441a-42de-90ad-acd5661820c0_S_secvpfரெயில்வேயில் ஜூனியர் என்ஜினீயரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று காலை சென்னையில் 18 மையங்களில் நடைபெற்றது.

தஞ்சாவூர் வல்லத்தை சேர்ந்த அரவிந்தன், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல் மாடியில் அமைக்கப்பட்ட மையத்தில் தேர்வு எழுத வந்து இருந்தார்.

தேர்வு அறையில் அமர்ந்து இருந்த போது அவர் வைத்து இருந்த ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அரவிந்தன், ஒரிஜினல் அடையாள அட்டைக்கு பதிலாக ஜெராக்ஸ் அடையாள அட்டை வைத்து இருந்தார். இதையடுத்து அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியே செல்லும்படி அதிகாரி கூறினார்.

தேர்வு அதிகாரியை அரவிந்தன் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. தேர்வு எழுத முடியாததால் மனவேதனை அடைந்த அரவிந்தன் தேர்வு மையத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் அவரது கை, கால்களில் பலத்த அடிபட்டது. அவரை உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனால் தேர்வு மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வு நடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுரங்காபாத்: மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது!!
Next post லிங்கா படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!!