‘குட்டிப்புலி’ சினிமா பாணியில் கோவில் உண்டியலில் திருடியவன் கைது!!

Read Time:1 Minute, 37 Second

3b80e252-9052-4845-8349-d3404f5e5799_S_secvpfமேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் புகழ்பெற்ற வீரகாளியம்மன்கோவில் உள்ளது. இதன் அருகே கீழவளவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது கோவில் காம்பவுண்டு சுவரில் இருந்து யாரோ குதிக்கும் ஓசை கேட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் மதிவாணன் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினார். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவன் கோவில் உண்டியலில் திருடி விட்டு வந்தது தெரியவந்தது.

கோவில் உண்டியலை உடைக்காமல், ‘குட்டிப்புலி’ சினிமா பாணியில் தென்னக்குச்சியில் ‘சுவிங்கம்’ ஒட்டி அதன் மூலம் ரூ.1300ஐ அவன் திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

விசாரணையில் அவனது பெயர் கண்ணன் (வயது 32) என்பதும், உறங்கான்பட்டியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.

மேலும் கைதான கண்ணன், மேலூர் அருகே உள்ள அம்பலகாரன்பட்டியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவிலில் 2 முறை திருடி சிறை சென்றவன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!
Next post உயிரை பலியெடுக்கும் பாதையில் அசத்திய நபர் (வீடியோ இணைப்பு)!!