ஹோமோ செக்சுக்கு வற்புறுத்தியதால் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை!!

Read Time:3 Minute, 45 Second

eeb270a5-5a8d-45cf-aa4b-c962b338300f_S_secvpfகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்த ராயப்பன் மகன் சம்பத்குமார்(வயது 30). கடந்த 6 மாதத்துக்கு முன்பு இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் மனைவியை பிரிந்தார். அதன் பின்னர் கவுண்டம்பாளையத்தை அடுத்த வைகோ நகரில் வசித்து வந்த சம்பத்குமார் கோவை சாய்பாபா காலனியில் உள்ள சலூனில் வேலைபார்த்து வந்தார்.

சம்பத்குமாருடன் பழனியைச் சேர்ந்த நாகராஜ்(24) என்பவரும் வேலைபார்த்து வருகிறார். அவ்வப்போது சம்பத்குமார் தங்கியிருக்கும் அறைக்கு நாகராஜ் வந்து செல்வார். நேற்று மாலை சம்பத்குமார் தங்கியிருந்த அறைக்கு வந்த நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார். அங்கு மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் சம்பத்குமார் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் நாகராஜ் கூறினார்.

துடியலூரில் உள்ள சம்பத்குமாரின் அண்ணன் மோகன்ராஜுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் விரைந்து வந்தார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்த சம்பத்குமாரை பரிசோதித்த போது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

எனவே துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பத்குமாரின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பத்குமார் கழுத்தை நெரித்து கொலை செய்தது போல் தெரிய வந்தது.

எனவே அவரை கொலை செய்தது யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட சம்பத்குமார் காம்பவுண்டு வீட்டில் வசித்து வந்தார். அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது நாகராஜ் தான் வெள்ளிக்கிழமை வந்து சென்றதாக கூறினார்கள்.

அவரைப்பிடித்தால் சம்பத்குமார் கொலையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் எனக்கருதிய போலீசார் அவரை பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது அவர் ‘நான் தான் சம்பத்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். சம்பவத்தன்று சம்பத்குமார் தங்கியிருந்த அறைக்கு சென்றேன்.

அப்போது அவர் என்னை ஹோமோ செக்சுக்கு வற்புறுத்தினார். நான் மறுப்பு தெரிவித்த போதும் தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றேன் என்றார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவள்ளூர் அருகே காப்பகத்தில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை: நிர்வாகி கைது!!
Next post தெலுங்கு படங்களுக்கு போட்டி போடும் நடிகை!!