என்னிடம் அப்படி நடந்து கொண்டால்? பொங்கும் ஸ்ருதி!!

Read Time:2 Minute, 14 Second

Untitled-18ஹைதராபாத், டெல்லியில் தொடர்ந்து பெண்கள் மீது பாலியல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கேட்டதும் பொங்கிவிட்டார் ஸ்ருதி.

“டெல்லி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பெண்கள் மீது வன்கொடுமைகள் நடந்துள்ளது. மானபங்கமும் செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது” என்றவர், பெண்களுக்கு பாதுகாப்பு எங்கிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

“நான் பார்த்த வரையில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று கேட்டால் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிறது என்பேன். அங்கு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே அந்த நகரம் எப்போதும் எனக்கு பிடிக்கும்.”

ஆண்கள் விஷயத்தில் ஸ்ருதி எப்படி…?

“ஆண்கள் மேல் எரிந்து விழ மாட்டேன். யாரிடமும் பகை காட்டவும் மாட்டேன். மரியாதை கொடுப்பேன். ஆனால் என்னிடம் வேறு மாதிரி நடக்க முயன்றால் அவர்களை சும்மா விட மாட்டேன். நான் யார் என்று காட்டுவேன். கோழையாக இருந்தால் குட்டிக் கொண்டே இருப்பார்கள். தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். எந்த விஷயத்துக்கும் நான் பயந்தது கிடையாது. இந்த குணம் என் அம்மா சரிகாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர் பயந்து நான் பார்த்தது இல்லை. அம்மா மாதிரிதான் நானும் இருக்கிறேன்.”

கமல் கேட்டால் சந்தோஷப்படுவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்களும் உங்கள் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்!!
Next post திருவள்ளூர் அருகே காப்பகத்தில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை: நிர்வாகி கைது!!