உதயன் பத்திரிகை ஆசிரியர் படுகொலையைக் கண்டிக்கும் விடுதலையை விரும்பும் தமிழன் நான்

Read Time:3 Minute, 31 Second

கொலைவெறியர்களே கேழுங்கள் எழுத்துச் சுதந்திரம் பேச்சுச்சுதந்திரம் இவை இரண்டு சுதந்திரங்களும் ஒரு மனிதனுக்கத் தேவை இவை இரண்டையும் இழந்து தவிக்கும் தமிழனுக்கு தனி நாடு வேண்டுமா? அல்லது தனிநாடுதான் கிடைக்குமா, ஒரு பத்திரிகையாளன் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவன், பத்திரிகையாளன் என்றும் கற்பனைக் கதை எழுதுபவனல்ல, நாட்டில் நடக்கும் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை தன் பேனாமுனையில் மக்களுக்கு எடுத்துக்காட்டுபவன் அது அவனது கடமை. பதிதிரிகையில் வருவது சரியா பிழையா என்பதை நிர்ணயிப்பது மக்களாகிய எங்களின் கடமை பத்திரிகையாளனைக் கொலைசெய்வது உனது கடமையென்றால் அப்போது நீர் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களைச் செய்கின்றாய்.

அதனைப்ப் பத்திரிகையில் எழுதும் பத்திரிகையாளனைக் கொலைசெய்கின்றாய் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றாய். தொடர்ந்தும் எத்தனை பத்திரிகையாளர்களைப் படுகொலைசெய்திருக்கின்றாய் சரி பிழை பார்ப்பது மக்களாகிய நாம் பத்திரிகைகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எதனை எழுதப் பேச முற்படுகின்றார்கள் என்பதை நாம் சரி பார்ப்பதற்கு பார்த்திருக்கின்றோம், காத்திருக்கின்றோம் சரிபார்ப்பது நீரல்ல கொலைவெறியினை நிற்பாட்டு!

ஒரு மனிதனுக்குத் தேவையானது எழுத்துரிமை, பேச்சுரிமை இவற்றில் கைவைக்காதே என் தமிழினமே இககொலைவெறியினைப் பார்த்தும் மெளனமாக இருக்கின்றாயே ஏன்? ஆம் நீ கேள்விகேட்டாலே இந்த மாமிச விரும்பிகள் உன்னை அழித்துவிடுவார்கள் உண்மைதான் நீ ஒரு பாவப்பட்ட இனம் நாக்கைப் பிடுங்கி, நகத்தைப் பிடுங்கி, காலை வெட்டி, கையை வெட்டி, கண்ணைக்கட்டி, கருவறையிலிருக்கும் கருவைச் சிதைத்து எத்தனை வெறியாட்டம் ஆடுகின்றாய் உலகத்திலே ஹிட்லர் என்ற கொடியவன்தான் இதுபோன்ற செயல்களைப் புரிந்தான். அதுவும் தன்னினத்தைத் தான் அழிக்காது யூத மக்களைக் கொன்று குவித்தான். ஆனால் என்னினத்தில் பிறந்த ஹிட்லர்களோ ஐம்பது மடங்கு உயர்ந்துவிட்டார்கள். தன்னினத்தையே தான் அழித்து வீரம் படைக்கின்றார்கள்். சபாஸ்தான்!

தன்னினத்தை தான் அழிக்காத ஹிட்லரோ தன்னுயிரைத்தானே அழித்துக்கொண்டான். ஆனால் உன்னினத்தை நீயே அழிக்கும்போது
உனக்குப் பெயர் விடுதலை வீரனா?

பிரான்ஸிலிருந்து
அருண்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ் சூரிச்சில் புளொட் நடத்திய மேதின நிகழ்வுகள்
Next post அன்புள்ள தம்பி,