என் குழந்தைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் போராளிகள்: பெருமையடித்து கொண்ட தாய் சிறையிலடைப்பு (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 22 Second

mom_encourages_002சிரியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் போராளிகள் என பெருமையாய் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள லூதான்(Luthan) பகுதியில் ரூனாகான்(Runa Khan Age-35) என்ற பெண் தன் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

பிரித்தானிய வம்சாவளியை சேர்ந்த இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு, தன் குழந்தைகளை தீவிரவாதிகளாய் மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

எனவே முதலில் தன் 8 வயது மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்த்த இவர், தனது மற்ற குழந்தைகளையும் சேர்த்து பயிற்சி பெறவைத்துள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் தளத்தில் பெருமையாக அவர் கூறியது மட்டுமின்றி, மற்ற தாய்மார்களும் தங்களது குழந்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்த்து சண்டைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து, ரூனாகானை கைது செய்ததுடன் அவரின் வீட்டில் சோதனையும் நடத்தியுள்ளனர்.

அப்போது அவரது 2வது குழந்தையின் கையில் பொம்மை துப்பாக்கி மற்றும் தீவிரவாதிகளின் புத்தகத்தை வைத்திருப்பது போன்ற புகைப்படங்களும், இதே போன்று மற்ற குழந்தைகளின் படங்களும் கிடைத்துள்ளன.

இதனையடுத்து இவர் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தீவிரவாதத்தை ஊக்குவித்த குற்றத்திற்காக அவருக்கு 5 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேறு நபருடன் பழகியதால் காதலியை வெட்டிக் கொலை செய்த பெயிண்டர் கைது!!
Next post 54 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!