திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு!!

Read Time:1 Minute, 44 Second

801114119msஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க இன்று (08) காலை ஐதேக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சமர்பித்துள்ளதாக தெரியவருகிறது.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சு உள்ளிட்ட உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அங்குள்ள செயலாளர் இங்கு வந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று தெரிவித்துள்ளார்.

ஒரு செயலாளர் செல்லும் போது மற்றுமொரு செயலாளரை கொண்டுவருவது ராஜபக்ஷவிற்கு மிகவும் இலகுவானது என ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திஸ்ஸ அத்தநாயக்க இன்று மாலை அலரி மாளிகையில் விசேட ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவர் தனது ஆதரவை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஜயதிஸ்ஸ ரணவீர மைத்திரிபாலவிற்கு ஆதரவு!!
Next post ஜயந்த கெட்டகொட அரசாங்கத்துடன் இணைகிறார்!!