பிரான்சுடன் நாளை மோதல்: அரை இறுதியில் பிரேசில் நுழையுமா?
உலக கோப்பை கால்பந்தில் நாளை பிராங் பர்ட்டில் நடை பெறும் ஆட்டத்தில் பிரேசில்-பிரான்சு அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இம்முறை கோப்பை கைப்பற்றும் அணிகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது. உலக கோப்பை தொடங்கப் பட்ட 1930-ம் ஆண்டு முதல் இதுவரை அனைத்து உலக கோப்பையிலும் பங்கேற்றுள்ள பிரேசில் அணி தற்போது வலுவாக உள்ளது. அந்த அணியின் முன்கள வீரர்களான ரொனால்டினோ, அட்ரியானோ அசத்தி வருகின்றனர்.அதிலும் ரொனால்டினோவிடம் பந்து கிடைத்தால் அதை கோல் எல்லை வரை கொண்டு சென்று பாஸ் செய்வதில் அவரை மிஞ்ச எவராலும் முடியாது.
மேலும் ரொனால்டோ விமர்சனத்தை தகர்த்து அதிக கோல்கள் அடித்த ஜெட்முல்லரின் சாதனையை கானாவிற்கு எதிரான ஆட்டத்தில் முறியடித்துள்ளார். ககா, கேப்டன் காபு, ராபர்ட்டோ கார்லோஸ் அணிக்கு வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். அதிலும் ககா ஷாட் முறையில் கோல் அடிப்பதில் தூள் கிளப்பி வருகிறார்.
பிரேசில் அணியுடன் ஒப்பிடுகையில் பிரான்சு அணியின் தற்போதைய ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. அந்த அணி 2-வது சுற்றுக்கு படாதபாடுபட்டுதான் முன்னேறியது. லீக் ஆட்டத்தில் டோகோவிற்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. நாக்-அவுட்டில் சற்று எழுச்சியுடன் ஆடி ஸ்பெயினை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சு போராடியே கால் இறுதியில் நுழைந்துள்ளது. நாக்-அவுட்டில் பிரான்சு கேப்டன் ஜிடேன் சிறப்பாக ஆடினார். அந்த அணியில் பாட்ரிக், வையரா, கிலாடிமகிலீ, நடு களத்தில் பலமாக உள்ளனர். மேலும் தியரி ஹென்றி, ரிபரி ஆகியோரும் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.
உலக கோப்பைகளில் பிரேசிலும், பிரான்சும் 3 முறை மோதி உள்ளது. இதில் 1998ம் ஆண்டு இறுதி போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பிரேசில் 0-3 என பிரான்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
1958ம் ஆண்டு அரை இறுதி யில் பிரேசில் பிரான்சை தோற்கடித்தது. அதன் பிறகு 1986-ம் ஆண்டு உலக கோப் பையில் கால் இறுதியில் 4-3 என பிரேசில் வெற்றி பெற்று பிரான்சை வெளியேற் றியது.
சம்பா நடன வீரர்கள் என அழைக்கப்படும் பிரேசில் வீரர்களின் நேர்த்தியான ஆட்டத்தால் அந்த அணி தொடர்ச்சியாக உலக கோப் பைகளில் 11 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அனல் பறக்கும் பிரேசில் வீரர்களின் ஆட்டத்திற்கு முன்பு பிரான்சு தாக்குபிடிக்குமா? என்பது நாளை தெரியும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...