லிங்கா படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல்!!

Read Time:2 Minute, 58 Second

e7b598e2-35f7-4a69-b0dc-2f4130b03f7e_S_secvpfமதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லை வனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறேன்.

அந்த கதையை திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். எனவே, ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய ‘லிங்கா’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவில், “மனுதாரரின் முக்கியமான கோரிக்கை பதிப்புரிமை சட்டம் தொடர்பானது என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. மனுதாரர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்” என்று கூறப்பட்டு இருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், வக்கீல்கள் பீட்டர்ரமேஷ் குமார், வி.ரமேஷ் ஆகியோர் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ‘அப்பீல்‘ செய்துள்ளார்.

‘அப்பீல்‘ மனுவில் கூறி அவர் இருப்பதாவது:–

‘லிங்கா‘ படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்த மனு தனி நீதிபதியிடம் விசாரணைக்கு வந்த போது, நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், ‘லிங்கா‘ படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பொன்குமரன் எழுதி இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘லிங்கா’ படத்தின் கதையை பொன்குமரன் எழுதி உள்ளார் என்றும், படத்தின் திரைக்கதையை தான் எழுதி இருப்பதாகவும் கூறியுள்ளார். 2 பேரின் பதில் மனுவில் உள்ள முரண்பாடுகளை தனி நீதிபதி கவனத்தில் கொள்ள வில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நாளை (8–ந் தேதி) விசாரணைக்கு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரிக்கே ஆதரவு: ஆனால் ஐ.தே.கவுடன் இணைய மாட்டேன்!!
Next post பூனைக்கு யார் மணி கட்டுவது!! இலங்கையின் எதிர்கால அரசியல்??