நத்தம் அருகே கர்ப்பிணி பெண் வயிற்றில் திராட்சை உருண்டைகள்!!

Read Time:2 Minute, 22 Second

8816993f-f995-4ecf-91f2-41833457ee30_S_secvpfதிண்டுக்கல் அருகே 10 குழந்தைகளின் தாய் மரணத்தை தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள், சுகாதாரத்துறை சார்பில் வட்டாரம்தோறும் கர்ப்பிணிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை ஆலோசனை வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் அருகே நத்தத்தில் நடந்த மருத்துவ முகாமில், 65 கர்ப்பிணிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் 26 பேருக்கு பிரசவத்துக்கு சிக்கலான பல்வேறு வகையான நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

நத்தம் உலுப்பகுடியை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தைக்கு பதிலாக கொத்து கொத்தாக திராட்டை போல் உருண்டைகள் காணப்பட்டன. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்த பெண்னை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரவிகலா கூறுகையில்,

ஸ்கேன் செய்து பார்த்தபோது திராட்சைபோல் ஏராளமான உருண்டைகள் காணப்பட்டன. இந்த கருவுக்கு மருத்துவ உலகில் முத்துப்பிள்ளை என்போம். இந்த கருவை வளர்ச்சியடையவிட்டால் வேர்வேராக அவரது உடல் முழுவதும் பரவி கர்ப்பப்பை வரை நுழைந்துவிடும். இது ஒருகட்டத்தில் கேன்சராகக்கூட மாற வாய்ப்புள்ளது. அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்தால் அது அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

அதனால் அந்த பெண்ணுக்கு பிரவசம் நடக்காமல் வாய் வழியாக அந்த முத்துப்பிள்ளை நவீன அறுவை சிகிச்சை மூலம் எடுக்க உள்ளோம். இந்த முத்துப்பிள்ளையை மருத்துவ உலகில் மோலார் பிரக்னன்சி வெசிகுலர் மோர் எனவும் கூறலாம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் மீண்டும் கொடூரம்: மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலமாக வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து!!
Next post சின்னமனூர் அருகே பள்ளி மாணவியை கொலை செய்த காமுகர்கள் கைது!!