ஆசிரியை படுகொலையில் திருப்பம்: “பர்தா” பெண்ணின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)!!
துபாய் ஷோப்பிங் மாலில் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த பர்தா அணிந்த பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷோப்பிங் மாலிற்கு இபோல்யா ரியான் (Ibolya Ryan Age-46) என்ற அமெரிக்க ஆசிரியை தனது இரட்டை குழந்தைகளுடன் கடந்த 1ம் திகதி சென்றிருந்தார்.
அங்கு கழிவறை தொடர்பாக அவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பர்தா அணிந்த பெண் ஆசிரியையை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அப்பெண் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
பெரிய வில்லாவில் இருந்த அந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் இருந்த வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான பெண் அமீரகத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் இபோல்யாவை கொன்ற பிறகு ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் கழித்து கார்னிச் பகுதியில் உள்ள அலி அன்ட் சன்ஸ் கட்டிடத்தில் வசிக்கும் 46 வயது எகிப்து-அமெரிக்க டாக்டரின் வீட்டு வாசலில் வெடிகுண்டை வைத்துள்ளார்.
மருத்துவரின் மகன் மாலை நேர தொழுகைக்கு மசூதிக்கு செல்கையில் வாசலில் வெடிகுண்டு இருந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து வெடிகுண்டை செயலழிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி வீடியோவில் அந்த பெண் செய்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அவர் பர்தா அணிந்து மாலுக்குள் நுழைவது, கொலை செய்த பிறகு தப்பித்து ஓடுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.
அதன் பின்பு கருப்பு நிற பெட்டியை இழுத்துக் கொண்டு டாக்டரின் வீட்டுக்கு செல்வது, அதே பெட்டியுடன் அங்கிருந்து வெளியே வந்து காரில் செல்வது, காரில் உள்ள நம்பர் பிளேட்டை அமீரக கொடியால் மறைத்தது உள்ளிட்டவையும் கமெராவில் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து இந்த வழக்கை தீவிரவாத வழக்காக கருதி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குறித்த பெண்ணுக்கும், தீவிரவாத இயக்கத்திற்கும் தொடர்பிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating