ததேகூ ஆராய்ந்து முடிவெடுக்கும்!!

Read Time:4 Minute, 26 Second

917961400Untitled-1இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் முடிவு காண வேண்டியிருக்கின்ற போதிலும், தமிழ் மக்களுக்கென தனித்துவமாக உள்ள, தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து, முக்கிய வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி தெளிவாக அறிந்த பின்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வவுனியாவில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னோடியாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் மத்தியகுழு வவுனியாவில் கூடி நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தது.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமது கட்சியின் முடிவு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை, குடும்ப ஆட்சி முறை என்பவை இல்லாமல் செய்யப்பட வேண்டும், ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, ஊழலற்ற ஆட்சியையும், உருவாக்க வேண்டும் என்பது நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களின் பொதுப் பிரச்சினைகளாகும்.

ஆயினும் தமிழ் மக்களுக்கென தனித்துவமான பல பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள அரச சார்பு வேட்பாளரும் சரி எதிரணியின் பொது வேட்பாளரும்சரி, ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிடவில்லை.

தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், போரினால் பாதிக்கப்பட்டு இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ள மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள படையினர் அவற்றில் இருந்து வெளியேறி அந்த மக்கள் சொந்த இடங்களில் குடியேறுவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.

காணமல் போனவர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் இந்த முக்கிய வேட்பாளர்களின் கருத்து, அரசியல் நிலைப்பாடு என்பவற்றை அறிந்த பின்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு ஒன்றை எடுக்கும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வரும் திங்களன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூடி நிலைமைகளை ஆராய்ந்து பேச வேண்டியவர்களுடன் பேச வேண்டிய விடயங்கள் குறித்து பேச்சக்கள் நடத்தி, அவை தொடர்பாக அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கமைவாகவே கூட்டமைப்பின் முடிவு அமையும் என அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க இரு நாட்கள் பொது விடுமுறை!!
Next post யாழில் பழைய கைக்குண்டு மீட்பு!!