சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்க பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி கடிதம்!!

Read Time:1 Minute, 40 Second

fbb6b63a-e2e7-4f6d-92ed-7fb22df72b7c_S_secvpfசிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்கும் யோசனைக்கு சில மத்திய மந்திரிகளும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த தடை நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மும்பையைச் சேர்ந்த முன்னாள் சுங்க ஆணையர் தீபக் குமார், சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தான் சிகரெட்டுகளை தொடர்ந்து புகைத்ததால், 2008-ம் ஆண்டு தனக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டதாகவும், அதனால், தனது குரல் பெட்டி அகற்றப்பட்டு, மிஷினின் உதவியால் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் சிரமப்படும் தனக்கு கடந்த ஆண்டு நாக்கில் புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், அதையடுத்து, நாக்கின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதால், சிகரெட்டை சில்லறையாக விற்க தடை விதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 35,000 சுற்றிவளைப்புக்கள் – சுமார் 90 மில்லியன் அபராதம்!!
Next post தேர்தல் தொடர்பில் 52 முறைப்பாடுகள் பதிவு!!