நாமக்கல் அருகே இளம்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 45 Second

fcb57b4c-637f-4671-83a4-254a199f3926_S_secvpfநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுக்கும் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த லாரி அதிபர் ரமேஷ் (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் சித்தாளந்தூர் அம்மன் கோவிலில் இன்று காலை நடக்க இருந்தது.

இதுகுறித்து நாமக்கல் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அந்த அமைப்பை சேர்நத சரண்யா, ராஜலட்சுமி, மற்றும் திருச்செங்கோடு சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணுக்கு 18 வயதுக்கு குறைவாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

18 வயது ஆனவுடன் இளம்பெண்ணுக்கு திருமணம் செய்யுமாறு கூறி அந்த 15 வயது இளம்பெண்ணின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். இன்று திருமணம் நடக்க இருந்த இளம்பெண் தற்போது 10–ம் வகுப்பு படித்தார். அதுவும் கடந்த 3 மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து அது தற்போது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: நாளை வேட்பு மனுத்தாக்கல்!!
Next post இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்!!